புயல் நேரத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் தாழ்வான இடங்களில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல், மழையை ஒட்டி தமிழகத்தின் 36 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கடலூர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 6 படைகள் விரைந்துள்ளதாக கூறிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
புயல் நேரத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Comments