ஜோ பைடனின் புதிய அமைச்சரவை பெயர் பட்டியல் வெளியீடு
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்கள் பெயர் பட்டியலை அறிவித்துள்ளார்.
அதன்படி, வெளியுறவுத் துறை அமைச்சராக ஆன்டனி பிளின்கென், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு ஜாக் சல்லிவன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமெரிக்க தலைமை தூதர் ஜான் கெர்ரி ஜோ பைடனின் சிறப்பு தூதராகவும், உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக அலெஜான்ட்ரோ மயோர்காசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் துணை சிஐஏ இயக்குநரான அவ்ரில் ஹைன்ஸை தேசிய புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சரவை உறுப்பினர் அந்தஸ்துடன், லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் ஐக்கிய நாடுகள் சபையில் தனது தூதராக பணியாற்ற பரிந்துரைக்கப்படுவார் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
U.S. President-elect Joe Biden named key members of his administration, including Antony Blinken to lead the State Department, John Kerry as a climate envoy and Janet Yellen for Treasury Secretary — a history-making move for that office https://t.co/eBiUb9cqET pic.twitter.com/UVzmHy76IJ
— Reuters (@Reuters) November 24, 2020
Comments