பஞ்சாப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நாளை முதல் பயணிகள் ரயில் இயக்கம் - இந்திய ரயில்வே
பஞ்சாப்பில் நாளை முதல் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக நேற்று அங்கு சரக்கு ரயிலை இயக்கி ரயில் வழித்தடங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆராயப்பட்டது. இதனை தொடர்ந்து பயணிகள் ரயிலை நாளை முதல் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் கடந்த 40நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு ரயில் சேவை முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளது.
Northern Railway has planned Restoration of Train services (Freight & Passengers) in Punjab & other state in phased manner subject to track safety clearance from divisions.
— Northern Railway (@RailwayNorthern) November 23, 2020
Comments