வங்கக் கடல், மன்னார் வளைகுடாவில் நாளை வரை பலத்த காற்று வீசும்...மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை
மன்னார் வளைகுடா வரையிலான வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று இருக்கக்கூடும் என்பதால் 47 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகளில் இருந்த வலைகளை கரைக்கு கொண்டு சேர்த்து வருகின்றனர்.
மீனவர்கள் கடற்கரைப் பகுதியில் இருந்து வெளியேறி புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும் என்றும், படகுகள் மற்றும் வலைகளை பத்திரமாக கரைக்கு கொண்டு வருமாறும் மீன்வளத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
Comments