வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப் பயணம்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் பயணமாக பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று புறப்படுகிறார்.
அமைச்சரான பின் முதன்முறையாக பஹ்ரைன் செல்லும் அவர், இருதரப்பு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் செல்லும் ஜெய்சங்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் மீண்டும் பணியாற்றுவதற்கான சூழ்நிலை குறித்து பேச உள்ளார். இறுதியாக செஷல்ஸ் தீவுகளுக்குச் செல்லும் ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
External Affairs Minister Dr S Jaishankar will visit Bahrain, UAE and Seychelles from November 24 to 29. During the visit, he will be meeting his counterparts and also the top leadership of these countries: Ministry of External Affairs
— ANI (@ANI) November 23, 2020
(file pic) pic.twitter.com/0UDISEzkGW
Comments