நிவர் புயலை எதிர்கொள்ள மக்கள் என்னென்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் - தமிழக அரசு அறிவுறுத்தல்

0 6387

நிவர் புயல் காலத்தில் மக்கள் அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
மேலும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ளது

தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், 24ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெரும் மழையும், புயலும் வீச இருப்பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

மக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும் போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழவும் வாய்ப்புள்ளதால் அச்சமயங்களில் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் குடிசைகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments