நிவர் புயலை எதிர்கொள்ள சென்னை காவல் துறையில் 10 பேரிடர் மீட்பு குழு அமைப்பு

0 2162
நிவர் புயலை எதிர்கொள்ள சென்னை காவல் துறையில் 10 பேரிடர் மீட்பு குழு அமைப்பு

நிவர் புயலை எதிர்கொள்ள ஏதுவாக, சென்னை காவல் துறையில் 10 பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் குழுவினருடன் பேரிடர் காலங்களில் பணிபுரிந்த ஆயுதப் படையைச் சேர்ந்த, 175 காவலர்களும் களமிறங்குகின்றனர்.

ஆயுதப்படை ஆய்வாளர் தலைமையில் 10 குழுவாக பிரிந்து சென்னை ராஜரத்தினம் மைதானம், வண்ணாரப் பேட்டை, அம்பத்தூர் மற்றும் பரங்கிமலை என நான்கு மண்டலங்களிலும் முகாமிட்டுள்ளனர்.

இவர்களுக்கு பைபர் படகு உள்ளிட்ட தேவையான மீட்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments