பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்

0 1692
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்

ராஜீவ் காந்தி உள்ளிட்ட 15 பேர் கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக, பரோல் காலத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து, அவர் சிகிச்சைக்கு செல்லும்போது உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே, பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக அக்டோபர் 9-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரோல் காலம் இன்றுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments