அமெரிக்க இசை விருது விழாவில், சிறந்த இசைக்கலைஞர் விருதை 6வது முறையாக வென்ற பாடகி டெய்லர் ஸ்விப்ட்
அமெரிக்க இசை விருதுகள் விழாவில், ஆண்டின் சிறந்த இசைக் கலைஞருக்கான விருதை 6வது முறையாக வென்று பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் சாதனை படைத்துள்ளார். ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த விருது விழா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இந்த விழாவில் "ஃபோக்லோர்" என்ற ஆல்பத்திற்காக சிறந்த இசைக் கலைஞர் உட்பட 3 விருதுகளை டெய்லர் ஸ்விப்ட் தட்டிச்சென்றார். இதே போன்று பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபர், கனடாவைச் சேர்ந்த வீக்கெண்ட் இசைக்குழு, தென்கொரியாவின் பிடிஎஸ் இசைக்குழுவினரும் பல்வேறு விருதுகளை வென்றனர்.
? | Taylor Swift has just won Artist of the Year at the 2020 #AMAs — congratulations @taylorswift13!
— Taylor Swift News (@TSwiftNZ) November 23, 2020
Taylor has extended her record as the most awarded artist of all time in this category with SIX wins (2009, 2011, 2013, 2018, 2019 & 2020) pic.twitter.com/JaCAX1cpJ1
Comments