’இன்னும் நான்கைந்து நாள்கள் தான்...’ - ரோஹித் ஷர்மாவுக்கு யார்க்கர் வீசியுள்ள ரவி சாஸ்திரி!

0 4156
ரோஹித் ஷர்மா

ஹிட் மேன் ரோஹித் ஷர்மா, IPL கோப்பையை மும்பை இந்தியன்ஸ்க்கு 5 வது முறையாக வாங்கிக் கொடுத்து சாதனை படைத்துள்ளார். ஆனால் இடது கால் தசை பிடிப்பு காயம் காரணமாக, ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டீமில் முதலில் இடம் பெற முடியாமல் போனது. துபாயிலிருந்து இந்தியா திரும்பிய அவர், தனது உடல்நிலை தகுதியை நிரூபிக்க தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்று வருகிறார்.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஆட முடியாமல் போனாலும், அவர் முழு உடல் தகுதியை அடையும் பட்சத்தில், டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ‘இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , இன்னும் 4 நாட்களுக்குள் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா வந்தால் தான், 14 நாட்கள் தனிமைப் படுத்துதல் முடிந்து, முதல் டெஸ்ட்டில் அவரால் ஆட முடியும். இல்லையென்றால், அவரை ஆட வைப்பது இயலாமல் போகலாம்’ என்று ஒரு யார்க்கரை வீசியுள்ளார். அவரது அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, சிகிச்சை மற்றும் பயிற்சியில் உள்ள ரோஹித் ஷர்மாவை தேசிய அகாடமி விடுவித்தால் மட்டும்தான், ரவி சாஸ்திரி சொல்லியுள்ள குறிப்பிட்ட கெடுவுக்குள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அணியில் இடம் பிடிக்க முடியும். ரவி சாஸ்திரியின் அறிவிப்பு ரோஹித் ஷர்மா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. 

குறிப்பிட்ட நாள்களுக்குள் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா சென்று அணியில் இடம்பிடிப்பாரா, அவரது சிக்ஸர் ஷாட்களைப் பார்க்க முடியுமா என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments