நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக உழவன், சோழன் ரயில்கள் 2 நாட்கள் ரத்து

0 4567

புயல் எச்சரிக்கை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை - தஞ்சாவூர் இடையான உழவன் விரைவு ரயில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி இடையே மயிலாடுதுறை வழியாகச் செல்லும் சோழன் விரைவு ரயில் புதனன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மைசூர் - மயிலாடுதுறை ரயில், எர்ணாக்குளம் - காரைக்கால் ரயில், கோவை - மயிலாடுதுறை ரயில் ஆகியன அடுத்த இரு நாட்களும் திருச்சியில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தே திரும்பிச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புவனேசுவரம் - புதுச்சேரி ரயில் சென்னை வரை மட்டுமே இயக்கப்படும்.

புதுச்சேரி - ஹவுரா அதிவிரைவு சிறப்பு விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதும் திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments