கொரோனா தடுப்பூசி பக்க விளைவு குறித்து, தடுப்பூசி போடுபவர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் திரட்ட அமெ.மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை
முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் நபர்களிடம் இருந்து, பின்விளைவுகள் பற்றிய தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் திரட்ட அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி முதலில் ஒரு வாரத்திற்கு தினமும் பக்கவிளைவுகள் குறித்த குறுந்தகவல்கள் பெறப்படும். அதன்பின்னர் வாரம் ஒருமுறை என ஆறு வாரங்களுக்கு தகவல்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் இருந்து கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலாள நபர்களுக்கு தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஃபைசர் உள்ளிட்ட நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளின் இறுதிக்கட்ட சோதனை நடக்கிறது. அதன் பிறகு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி கிடைத்த பின்னர் முதற்கட்ட தடுப்பூசி போடுதல் துவங்கும்.
Comments