சௌகார்பேட்டை கொலை வழக்கு-துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது
சென்னை சௌகார்பேட்டையில் மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், துப்பாக்கியை கொடுத்த முன்னாள் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சௌகார்பேட்டையில் பைனான்சியர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், அவரது மகன் ஷீத்தல் ஆகியோர் கடந்த 11-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அக்குடும்பத்தின் மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு துப்பாக்கியை பழக்கத்தின் அடிப்படையில் வழங்கிய, ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராஜு துபேவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த துப்பாக்கிக்கு உரிமம் பெற்றிருந்த முன்னாள் விமானப் படை அதிகாரியும் ராஜு துபேவின் மனைவியுமான மது துபே-விடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல கொலையாளிகள் தப்பிச் செல்ல பயன்பட்ட துபே தம்பதியின் கார் தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கொலையாளிகளில் ஒருவரும், ஜெயமாலாவின் தம்பியுமான விலாஷ், புனே அகமத் நகர் காட்டுப் பகுதியில் விலாஷ் வீசிய கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Comments