கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் ரோஷன் பெய்க் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஐ.எம்.ஏ. நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ரோஷன் பெய்க், வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் செயல்பட்டு வந்த ஐ.எம்.ஏ., நிதி நிறுவன மோசடிக்கு உதவியாக இருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள் உள்துறை அமைச்சர் ரோஷன் பெய்க் மீது புகார் எழுந்தது.
இது குறித்து ரோஷன் பெய்க்கிடம் நேற்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் அமைந்துள்ள ரோஷன் பெய்க் வீட்டில் 13 சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவினர் காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Karnataka: A search by CBI is underway at the residence of former Congress Minister and ex-MLA Roshan Baig, in Bengaluru.
— ANI (@ANI) November 23, 2020
He was arrested by Central Bureau of Investigation (CBI) yesterday, in IMA scam case and sent to 14 days judicial custody. pic.twitter.com/8d8puMe3Zf
Comments