போதைப் பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகைகள்...சிறையில் ஆட்டம் பாட்டம் என பொழுதை கழிப்பதாக தகவல்
கர்நாடகாவில் போதை பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகைகள் ராகிணியும், சஞ்சனா கல்ராணியும் சிறையில் ஆட்டம் பாட்டத்துடன் பொழுதை கழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் கிடைக்காததால் சிறையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முதலில் சக கைதிகள், காவலர்களிடம் நடிகைகள் இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது, வேறு வழியின்றி அவர்களுடனே நட்பு பாராட்டி, ஆடிப்பாடி பொழுதை கழிப்பதாக சொல்லப்படுகிறது.
Comments