நிவர் புயலை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளது-அமைச்சர் தங்கமணி
புயல் கரையைக் கடக்கும்போது, அதை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மின்துறை தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு மின் வாரியத் தலைமையகத்தில் இருந்து, பருவமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டலத் தலைமைப் பொறியாளர்களுடன் அமைச்சர் தங்கமணி காணொலியில் கலந்துரையாடினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் கரையைக் கடக்கும் போது முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
புயலுக்குப் பின்னர் விரைந்து மின்சாரம் வழங்கத் தேவையான பணியாளர்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
புயல் தாக்குதலுக்கு இலக்காகும் கடலூர் மாவட்டத்தில் புதைவழி மின்கம்பி வடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகள் நிறைவுற்றால் பேரிடர்க் காலத்திலும் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Comments