தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியிடம், நடிகர் டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்றுச் சென்னையில் நடைபெற்றது. மொத்தம் 1050 வாக்குகள் பதிவாயின.
தலைவர் பதவிக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.
2 துணைத் தலைவர்களில் முரளி அணியில் போட்டியிட்ட ஆர்.கே.சுரேஷ் வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசனும் வென்றுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வி #TNProducercouncil | #ProducerCouncilElection2020 | #TRajendar https://t.co/Sc6K8IHuu8
— Polimer News (@polimernews) November 23, 2020
Comments