நிகோபர் தீவுகள் அருகே தரை தட்டும் நிலையில் சிக்கிய சரக்குக் கப்பல்... மீட்ட இந்திய கடலோர காவல் படையினர்

0 1898
நிகோபர் தீவுகள் அருகே தரை தட்டும் நிலையில் சிக்கிய சரக்குக் கப்பல்... மீட்ட இந்திய கடலோர காவல் படையினர்

நிகோபார் தீவுகள் அருகே தொள்ளாயிரம் மில்லியன் டன் எண்ணெய்ப் பொருட்களுடன் துபாய் சென்றுக் கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலின் ஆழம் குறைந்த பகுதியில் தரை தட்ட இருந்த நிலையில் அதனை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

சரக்கு கப்பல் அனஸ்தாசியா-1 இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டது.

கப்பல் தரைதட்டிய தகவல் அறிந்து உடனடியாக களமிறங்கிய கடலோர காவல் படையினர் வான் மற்றும் கடல் வழியாக முற்றுகையிட்டு அந்த கப்பலை பாதுகாப்பாக கடலின் ஆழப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் தரைதட்டுவதில் இருந்து அந்தக் கப்பல் தப்பி தனது பயணத்தைத் தொடர்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments