சமூக ஊடகங்களில் அவதூறு செய்தால்5 ஆண்டுகள் சிறை என்ற கேரள அரசு சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு - முதலமைச்சர் விளக்கம்
சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவோர் குறித்து தமக்கு புகார்கள் அதிகளவில் வந்ததாகவும் அதன் காரணமாகவே சட்டத்தைக் கடுமையாக்கியதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதல்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் அவதூறு பதிவுகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் காவல்துறை சட்டத் திருத்தத்தை கேரள அரசு கொண்டு வந்தது ஏன் என பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
இச்சட்டம் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்காது என்றும் கேரள முதலமைச்சர் உறுதியளித்தார்.
Comments