குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்: கொரோனா விதிகளை மீறியதாக கைதாகி 8 மணி நேரத்துக்குப்பின் விடுதலை
ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டியதாகக் கைது செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 8 மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அவர், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.
இரவு 10 மணி தாண்டியும் உதயநிதி விடுதலை செய்யப்படாததால் தி.மு.கவினர் மண்டப வாயில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார், பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் 11 மணிக்கு உதயநிதி விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் சாக்கோட்டையில் கொடியேற்றிவிட்டு, கும்பகோணம் விடுதியில் தங்கினார். இன்று கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு பகுதிகளில் உதயநிதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்: கொரோனா விதிகளை மீறியதாக கைதாகி 8 மணி நேரத்துக்குப்பின் விடுதலை #UdhayanidhiStalin | #DMK | #ElectionCampaign | #Kuthalam | #Arrested https://t.co/HPAyG8FtWM
— Polimer News (@polimernews) November 23, 2020
Comments