அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பு
அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று தாக்கத்தினால் இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, அங்கு உச்சபட்ச உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தமாத இறுதிக்குள் 50 மில்லியன் டோஸ் மருந்தை உற்பத்தி செய்ய ஃபைஸர் நிறுவனம் முன்வந்துள்ளது.
11 அல்லது 12ம் தேதி இதற்கான ஒப்புதல் அளிக்கப்படும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் தடுப்பூசி விநியோகம் தொடங்கும் எனவும் தடுப்பு மருந்துத் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருந்துகளை வழங்க அனுமதிக்கக் கோரி, ஃபைஸர் மற்றும் பயோ எண்டக் நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
U.S. vaccine program head says first Americans could be vaccinated on December 11: CNN https://t.co/09nLVBrl1W pic.twitter.com/Rgh4j5f74W
— Reuters (@Reuters) November 22, 2020
Comments