3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி மனைவியுடன் கைது
ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி, மனைவியுடன், தனிப்படை போலீசாரால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார்.
சவுகார்பேட்டையில், கடந்த 11 ஆம் தேதி, பைனான்சியர் தலீல் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் மூவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில், கொலையாளி களுக்கு கைத்துப்பாக்கி கொடுத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராஜு துபே, அவரது மனைவி மது துபே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடமும் கொலை நிகழ்ந்த பின் தப்பி செல்ல கொலையாளிகளுக்கு கார் கொடுத்து உதவி னார்களா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments