சாலை வசதி சரியில்லை... பெண் கொடுக்கவோ, எடுக்கவோ யாரும் முன்வர வில்லை! கண்ணீர் வடிக்கு கிராமக்கள்...

0 882

சாலை வசதி சரியில்லை.... பெண் கொடுக்கவோ, எடுக்கவோ யாரும் முன்வர வில்லை!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனப்பத்தூர கிராமத்தில் குடிமராமத்து பணியால் தூர்ந்து போன சாலையை சீரமைத்து தரக்கோரி இக்கிராம மக்கள் அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

கிராமத்தின் ஒரு பகுதியான ஏரிகோடி குடியிருப்பு மற்றும் காலணி பகுதிக்கும் செல்லும் சாலையானது கிராமத்தை ஒட்டிய பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி கரையின் மீது தார் சாலை அமைத்து சென்று வருகின்றனர்.

அந்த சாலை தற்போது ஏரி மராமத்து பணியில் மண்கொட்டி தூர்க்கப்பட்டதால் அதனை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இரண்டு குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ள ஏரிக்கரை சாலை, கடந்த ஜுலை மாதம் பொதுப்பணித்தறை மூலம் 40 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து பணிக்காக கரை பலப்படுத்த கரைமீது மண் கொட்டப்பட்டுள்ளது.அதனால் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை முற்றிலும் தூர்ந்துபோனது.

கொட்டப்பட்ட மண் சமன் செய்யப்படாமல் மேடும், பள்ளமாக உள்ளதால் அந்த வழியாக எளிதில் வெளியே சென்று வர கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் உயிர் பயத்தடன் பயணித்து வருகின்றனர்.

இது குறித்து கிராமக்கள் கூருகையில் நான்கு தலைமுறையாக அவர்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் தற்போது 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், தங்கள் பகுதிக்கு ஏரிக்கரையின் மீது செல்லும் பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் தார் சாலை அமைக்கப்பட்டதாகவும் அந்த சாலை சில வருடங்களிலேயே சேதமடைந்து போனதாகவும், இருப்பினும் அதைதனை இவவளவு காலமாக பயன்படுத்தி வந்ததநிலையில்.

தற்போது அதன் மீதும் ஏரி குடிமராமத்து பணிக்காக அந்த சாலையில் மண் கொட்டி சமன் செய்யாமல், பணி முடிக்க காலம் தாழ்த்தி வருவதால் அந்த வழியாக நடந்து செல்வதற்கே சிறமப்படும் நிலையாக உள்ளது என்றும்,

போக்குவரத்திற்கு சாலை இல்லாத தால் தினமும் வேலைக்கு செல்வோரவொ, அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலையும், இடுகாட்டிற்கு நான்கு பேர் சுமந்து செல்ல முடியாத நிலையில் இருப்பதாக கூரினர்,

மேலும் சாலை வசதி சரியில்லையென்று தங்கள் கிராமத்திலிருந்து பெண் எடுக்கவும், பெண் கொடுக்கவும் யாரும் முன்வராததால் திருமணமாகாமல் தங்கள் கிராமத்தில் திருமண வயதை தாண்டிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளதாக வேதனை தெரிவித்து கண்ணீர் வடிக்கிறானர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு குடிமராமத்து பணியில் ஏரிக்ரை பலப்படுத்தும் பணியானது இன்னும் முழுமையடையவில்லை எனவும். மண் கொட்டப்பட்டதால் ஏற்கனவே இருந்த தார் சாலை மறைந்து போனதாகவும், தொடர் மழையின் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த ஓரிரு நாட்களில் பணி தொடங்கப்பட்டு சமன் செய்யப்படும் என தெரிவித்தார. மேலும் கரைமீது  சாலை அமைக்கும் பணிக்கும்  எங்களுக்கு சம்மந்தமில்லை சாலை அமைப்பது குறித்து ஊராட்சி நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும் என பதிலளித்தார்.

பின் ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் தொடர்பு கொண்டபோது கிராம மக்கள் பயன்பாட்டிற்காக ஏரிகரைமீது தார்சாலை அமைக்க வேண்டி கோரிக்கை வரப்பட்டால் அரசின் கவணத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments