தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஜே.பி. நட்டா 120 நாள் சுற்றுப்பயணம்

0 3133
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஜே.பி. நட்டா 120 நாள் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை பலப்படுத்தி, வலுப்படுத்தும் வகையில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, நாடு முழுவதும் 120 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழகம், மேற்கு வங்காளம், கேரளம் மற்றும் அசாம் மாநில தேர்தல் வெற்றிக்கான வியூகம் வகுப்பது குறித்து, அந்தந்த மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி நட்டா ஆலோசனை நடத்த இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண்சிங், புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டிசம்பர் முதல் வாரம், உத்தரகாண்ட்டில் இருந்து தமது பயணத்தை ஜே.பி நட்டா துவக்க உள்ளதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments