நடிகர் ரஜினிக்கு காய்ச்சல் என வெளியான தகவலுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கேளம்பாக்கத்திலுள்ள தனது பண்ணை வீட்டி தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த உள் துறை அமைச்சர் அமித்ஷாவை ரஜினிகாந்த் சந்திக்கவில்லை என்றும், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வாக்களிக்க வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இரண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை என அவரது செய்தி தொடர்பாளர் ரியாஸ் மறுத்துள்ளார்.
Comments