வேளாண் சட்டங்களுக்கு எதிரான ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு வாபஸ் - விவசாய சங்கங்கள்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான ரயில் மறியல் போராட்டத்தை, 15 நாட்களுக்கு மட்டும் வாபஸ் பெறுவதாக பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பான அறிவிப்பில், 15 நாட்களுக்களுக்குள் மத்திய அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்காவிட்டால், மீண்டும் ரயில் மறியல் போராட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, செப்டம்பர் மாதம் முதல் பஞ்சாபில் ரயில் மறியல் போராடட்ம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Comments