டெல்லியில் ஒரே நாளில் 111 பேர் கொரோனாவால் பலி

0 1071
டெல்லியில் ஒரே நாளில் 111 பேர் கொரோனாவால் பலி

டெல்லியில் ஒரு நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மீண்டும் 100-ஐ கடந்துள்ளது.

நேற்று மட்டும் 111 பேர் உயிரிழந்ததால், இதுவரை நோய்த்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,270 ஆக அதிகரித்துள்ளது.

புதியதாக 5,879பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ள அனைவரையும், மருத்துவக் குழுக்கள் வீட்டிற்கே சென்று கண்காணிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments