ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்று...ஜோகோவிச், ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

0 1198
ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்று...ஜோகோவிச், ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில், நட்சத்திர வீரர்களான ஜோகோவிச் மற்றும் நடால், அடுத்தடுத்து தோல்வியுற்று அதிர்ச்சி அளித்துள்ளனர்.

தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மட்டும் பங்குபெறும், டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

முதல் அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொண்ட ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், 7-5, 6-7, மற்றும்7-6 என்ற செட் கணக்கில், கடுமையாக போராடி வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் உலகின் இரண்டம் நிலை வீரரான நடால், ரஷியாவின் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்டார்.

அதில் முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்த மெத்வதேவ், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-6, 6-3 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments