ஜனவரி மாதம் முதல் தென் இந்திய நகரங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்
இந்திய ரயில்வே நிர்வாகம் தென் இந்திய ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறப்பு ரயிலை இணைக்கிறது.
பாரத தரிசனம் என்ற பெயரில் ஏழு இரவுகள் எட்டு பகல்களுக்கு இந்த ஆன்மீகச் சுற்றுலா நடைபெறும். புவனேசுவர் தொடங்கி, ராமேஸ்வரம், மதுரை, திருப்பதி வரை இந்த சுற்றுலா நீடிக்கும்.
இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் 8 ஆயிரத்து 85 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் ஜனவரி 2ஆம் தேதி முதல் இந்த பாரத தரிசனம் ரயில் சேவை தொடங்கும்.
இதற்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் செய்துகொள்ளலாம் என்று ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பின் அச்சம் காரணமாக அனைத்து வித முன்னெச்சரிககை நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Comments