இந்தியா உள்பட 3 நாடுகளின் கடற்படையினர் கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியது
இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் ஒத்திகை நேற்று அந்தமான் கடல் அருகே நேற்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் மூன்று நாடுகளைச் சேர்ந்த படகுகள் ,மற்றும் கப்பல்களும் இடம்பெற்றுள்ளன.
புயல் காலத்தில் மீனவர்களை பாதுகாப்பாக மீட்பது, பயங்கரவாத அச்சுறுத்தலை தடுப்பது போன்ற பயிற்சிகளில் மூன்று நாடுகளின் வீரர்களும் ஈடுபட்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் கடலோடு பயிற்சி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments