நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறும் தேதிகள் முடிவாகி விட்டன என்று சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டிருப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரக் குழு, தேதிகளை முடிவு செய்துள்ளது என்றும் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதனை சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்துள்ளார்.
மழைக்காலக் கூட்டத் தொடர் அனைத்து வித முன்னெச்சரிக்கையுடன் நடைபெற்றதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Comments