பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

0 4350

எல்லையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் எல்லையில் உள்ள ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது.

ஆத்திரத்தை தூண்டும் வகையிலான இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இருதரப்பினரும் மாறி மாறி சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர்.

இதில் இந்திய ராணுவ ஹவில்தார் பட்டீல் சங்ரம் சிவாஜி வீர மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments