டெல்லியில் காரில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம், மீறினால் ரூ.2000 அபராதம் - டெல்லி அரசு
காரில் செல்லும்போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் ஆக்கியுள்ள டெல்லி அரசு, இதை மீறுவோருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் எனவும் அறிவித்துள்ளது.
டெல்லியில் நாள்தோறும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனியாகக் காரில் செல்லும்போதுகூட முகக்கவசம் அணிவது கட்டாயம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக வாகனத்தில் செல்லும்போது முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த வழக்கின் விசாரணையின்போது, இந்த அபராதத்தை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்போவதாக உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்தது.
Delhi: Officials at Delhi-Noida border imposing fine of Rs 2,000 on people for not wearing masks while travelling
— ANI (@ANI) November 21, 2020
“We've received fresh guidelines for Rs 2,000 fine. There has been a decrease in challans but people are casual. They wear mask only at check posts,” says an officer pic.twitter.com/x4sDJVDdrV
Comments