80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்கும் முறை...சலுகை என்ற போர்வையில் பாஜகவுக்கு துணைபோகும் செயல் என ஸ்டாலின் குற்றசாட்டு
80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை என்ற போர்வையில் “தபால் வாக்களிக்கும்” முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருப்பது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும் - அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் செயல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு தேர்தலிலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என்று வாக்களிக்க வராத 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை, பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அபகரித்துக் கொள்ளும் முயற்சி இது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புதிய முறையை நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதைச் செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, இது தொடர்பான சுற்றறிக்கையைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Comments