பாகிஸ்தானில் 1300ஆண்டு பழமையான இந்து கோயில் கண்டுபிடிப்பு

0 5041
பாகிஸ்தானில் 1300ஆண்டு பழமையான இந்து கோயில் கண்டுபிடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பரிகோட் குண்டாய் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இந்த புராதன கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்கள், நீர்த்தொட்டி ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட்டப்பட்ட பல கட்டட அமைப்புகள் முதல்முறையாக தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஷ்ணு கோவிலாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments