கொரோனா மூன்றாவது அலை உருவாவதைத் தடுக்க போராடி வரும் டெல்லி அரசு

0 1642
கொரோனா மூன்றாவது அலை உருவாவதைத் தடுக்க போராடி வரும் டெல்லி அரசு

டெல்லியில் மூன்றாவது கொரோனா அலை உருவாவதைத் தடுக்க மத்திய அரசும் கெஜ்ரிவால் தலைமையிலான அரசும் கடுமையாகப் போராடி வருகின்றன.

பரிசோதிக்கப்படும் நூற்றுக்கு 15 பேர் வீதம் கொரோனா தீ நுண் கிருமியின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 50 பேருக்கு மிகாமல் நடத்த திருமணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, சந்தைகளை மூட அரசு பரிசீலித்து வருகிறது.

மக்கள் அதிகமாகக் கூடும் பல்வேறு முக்கிய இடங்கள் கொரோனா பரவலுக்குக் காரணமாக இருப்பதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதாக தெரிவித்த கெஜ்ரிவால் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுத்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments