அல் கொய்தா இயக்கத் தலைவர் ஜவாஹிரி உயிரிழந்ததாகத் தகவல்

0 1789
அல் கொய்தா இயக்கத் தலைவர் ஜவாஹிரி உயிரிழந்ததாகத் தகவல்

அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஜவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டாலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா.

ஆனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஜவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments