பூட்டான் எல்லைக்குள் சீனாவின் கிராமம் ஏதுமில்லை என பூட்டான் தூதர் மறுப்பு
பூட்டான் எல்லைக்குட்பட்ட பகுதியில் சீனா புதிய கிராமம் எதையும் அமைக்கவில்லை என்று பூட்டான் தூதர் மேஜர் ஜெனரல் வெட்ஸாப் நாம்கியல் அறிவித்துள்ளார்.
ஆனால் பாங்டா என்ற கிராமத்தை சீனா தனது குடியிருப்பாக மாற்றியுள்ளதாக வரைபடங்களை ஆதாரமாக வைத்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பூட்டான் எல்லைக்குள் இரண்டு கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனா அங்கு தனது மக்களை குடியமர்த்தியுள்ளதாகவும் புதிய கிராமத்தையே உருவாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பூட்டான் தூதரின் மறுப்பில் உண்மையில்லை என்று சீனா ஊடகங்கள் வரைபடத்தை வெளியிட்டுள்ளன.
Comments