இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்று

0 5108
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நேற்று ஒரே நாளில், 46 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்து 50 ஆயிரத்தை கடக்க, ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்கள், இதுவரை இல்லாத அளவிற்கு நோய்த்தொற்று பாதிப்பில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

மேலும், 560-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, நோய்த்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 700 கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments