கொரோனாவில் இருந்து முதியவர்களை காக்கும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

0 1686

கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராசெனிகா என்ற பிரிட்டிஷ் நிறுவனம் மற்றும் இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்து செயல்ப்பட்டு வருகிறது.

அதன் 2ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் வயதானவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டியுள்ளது, இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான மக்கள்தொகையில் பெரும் பகுதியான முதியவர்களை பாதுகாப்பதில் சாத்தியமான பயன்களை ஆக்ஸ்போர்டு -அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி நிரூபித்துள்ளது என உலகின் சிறந்த மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான தி லான்செட் மருத்துவ இதழில் நம்பிக்கைக்குரிய ஆரம்ப கட்ட முடிவுகள் என்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இளம் வயதினரை விட முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் அளிப்பதாக தெரிய வந்துள்ளது. 

ஆரோக்கியமான தன்னார்வல முதியவகள் 560 பேரை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், இளம் வயதினரை விட முதியோருக்கு பாதுகாப்பாகவும், எதிர்வினை குறைவாகவும் இருப்பது தெரிய வந்ததுள்ளது. மேலும் முதியோருக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.

கொரோனா அதிகமாக முதியோர்களை தாக்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் மகேஷி ராமசாமி தெரிவித்துள்ளார்.    

மேலும் அடுத்தக்கட்டமாக, இந்த தடுப்பூசி, கொரோனா வராமல் தடுக்குமா என்ற 3-ம் கட்ட பரிசோதனையில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த பரிசோதனை முடிவோடு, அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவன தடுப்பூசி மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி, ரஷியாவை சேர்ந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஆகிய 4 தடுப்பூசிகள் செயல்திறன் கொண்டவையாக உருவெடுத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments