அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் நடத்தியதால் உதயநிதி ஸ்டாலின் கைதாகி விடுவிக்கப்பட்டார்

0 2942
நாகை அருகே தடையை மீறி தேர்தல் பரப்புரை கூட்டம் நடத்தியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

நாகை அருகே தடையை மீறி தேர்தல் பரப்புரை கூட்டம் நடத்தியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திருக்குவளையில் கலைஞரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பு திமுகவின் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசார் கைது செய்தனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு, துரைமுருகன், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட உதயநிதி மற்றும் திமுகவினர் சிறிது நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments