மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் விறுவிறுப்பு
2ம் கட்ட மலபார் பயிற்சியின்போது இந்தியா, அமெரிக்க போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.
போர் கப்பல்களில் இருக்கும் பீரங்கி மூலம் சுட்டு ஒத்திகையில் ஈடுபட்டது தொடர்பான புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள், அரேபிக் கடலில் 4 நாள்கள் மேற்கொண்ட 2ம் கட்ட ஒத்திகை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இதில் இந்திய விமானந்தாங்கி கப்பலான விக்ரமாதித்தியாவில் இருந்து மிக்-29 விமானங்களும், அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான நிமிட்சில் இருந்து எப்-18 விமானங்களும் புறப்பட்டு தாக்குதல் ஒத்திகை நடத்தின.
Comments