கொரோனா தொற்று அதிகரிப்பு...மேலும் சில மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு
கொரோனா தொற்று வேகமாக பரவும் மேலும் சில மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அரியானா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு உயர்மட்டக் குழுவினர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில்,டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இந்த மாநிலங்களுக்கும் உயர்மட்டக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலை கண்டுபிடிப்பதில், விட்டுபோனவர்களை கண்டுபிடிக்க, சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Centre has rushed four high-level teams to Haryana, Rajasthan, Gujarat & Manipur to visit the districts reporting high number of COVID cases & support State's efforts. Centre is also contemplating about sending teams to other States/UTs reporting a rise in cases: Govt of India pic.twitter.com/ifdD3OFCHo
— ANI (@ANI) November 20, 2020
Comments