அரியர் தேர்வு ரத்து வழக்கின் காணொலி விசாரணை... ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் லாகின் செய்ததால் இடையூறு
சென்னை உயர்நீதிமன்றத்தில், அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்து, இடையூறு ஏற்பட்டதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
இன்று காலை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
அப்போது, சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் log in செய்ததால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதுடன், இடையிடையே சப்தங்கள் கேட்டு இடையூறு ஏற்பட்டது.
இதனால் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.முந்தைய விசாரணையின் போதும் இதேபோன்று ஏராளமானோர் பங்கேற்று இடையூறு ஏற்பட்ட நிலையில், மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Comments