நன்னடத்தை விதிகளின் படி சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய மனு
நன்னடத்தை விதிகளின் படி, 129 நாட்கள் சலுகை உள்ளதால், அந்த நாட்களை கழித்து சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. அவரது தண்டனை காலம் பிப்ரவரி 10-ம் தேதியுடன் நிறைவடைகிற நிலையில், அபராத தொகையை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ந் தேதியே விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ.யின் கீழ் எழுப்பிய கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்தது.
தொடர்ந்து கடந்த 17-ம் தேதி பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அபராத தொகை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், நன்னடத்தை விதிகளின் படி, 129 சலுகை நாட்களை கழித்து சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி, பரப்பன அக்ரஹார சிறைத்துறை முதன்மை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என முதன்மை கண்காணிப்பாளர் பதில் அளித்துள்ளார்.
Comments