காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை மறுக்கிறது இந்திய ராணுவம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன.
கடந்த வாரம் வடக்கு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. அதில் பாதுகாப்பு படையினர் 5 பேரும், பொதுமக்கள் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பல்வேறு ராணுவ முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானின் 11 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 12 பேர் படுகாயம் அடைந்த தாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடுங்குளிர் காலம் துவங்குவதற்கு முன்னர் எல்லை வழியாக அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயன்று வருகிறது.
அதை ஒடுக்கும் திட்டத்துடன் அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க நமது ராணுவம் முடிவு செய்துள்ளதாகவும், அதன்படியே பின்பாயின்ட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
Comments