மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார் திமுக எம்எல்ஏ பூங்கோதை

0 5639
மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார் திமுக எம்எல்ஏ பூங்கோதை

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்ட நிலையில் நெல்லையில் ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக கடையம் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அவருக்கும் அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து  இரவு வீடு திரும்பிய அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியிலுள்ள மருத்துவமனையில் நேற்று சுயநினைவில்லாமல் அனுமதிக்கப்பட்டார்.

மாலையில் உடல் நலம் தேறியதையடுத்து தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்க முடிவு செய்து ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments