ரெம்டெசிவரால் கொரோனாவை குணப்படுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம்
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை கொடுக்க கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளில், இந்த மருந்தால் கொரோனா நோயாளிகளுக்கு எந்த பலனும் கிடைக்காது என அது தெரிவித்துள்ளது.
மரணத்தை தவிர்க்கவோ, வென்டிலேட்டர் தேவையை குறைக்கவோ இந்த மருந்தால் முடியாது என்பதால், நோயாளி எந்த நிலையில் இருந்தாலும், ரெம்டெசிவரை வழங்க கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று துவங்கிய காலகட்டத்தில் இந்த மருந்து நல்ல பலனை அளிப்பதாக தகவல் வெளியானது.
எனவே அதற்கு ஒரளவு கிராக்கி ஏற்பட்டது. இப்போது 7 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ரெம்டெசிவரால் எந்த பயனும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவரால் கொரோனாவை குணப்படுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம் #WHO | #Ramdesivir | #CoronaVaccine https://t.co/M3oIu5vk5H
— Polimer News (@polimernews) November 20, 2020
Comments