சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரம்: ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்த நிறுவனத்துக்கும் சீல் வைத்துள்ளதால், தொழில் செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறி ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக செயல்படுவதா என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க போவதாகவும், நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர். இதை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சார்பில் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார்.
Comments