டெல்லியில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் - முதலமைச்சர் கெஜ்ரிவால்

0 1348
டெல்லியில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அபராதம் 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.

பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணிந்த போதிலும், இன்னும் சிலர் முகக் கவசம் அணியாமல் இருப்பதாகவும், அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறினார். அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments